نتائج البحث: 6236
|
ترتيب الآية | رقم السورة | رقم الآية | الاية |
3039 | 26 | 107 | إني لكم رسول أمين |
| | | நிச்சயமாக நான் உங்களுக்கு (இறைவனால்) அனுப்பப் பெற்ற நம்பிக்கைக்குரிய தூதன் ஆவேன். |
|
3040 | 26 | 108 | فاتقوا الله وأطيعون |
| | | ஆகவே, அல்லாஹ்வுக்கு அஞ்சங்கள்; எனக்கு வழிபடுங்கள். |
|
3041 | 26 | 109 | وما أسألكم عليه من أجر إن أجري إلا على رب العالمين |
| | | இதற்காக, நான் உங்களிடம் கூலி எதுவும் கேட்கவில்லை. நிச்சயமாக எனக்குரிய கூலி அகிலங்களின் இறைவனிடம் இருக்கிறது. |
|
3042 | 26 | 110 | فاتقوا الله وأطيعون |
| | | ஆகவே, அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; எனக்கும் வழிபடுங்கள் (என்று நூஹ் கூறியபோது), |
|
3043 | 26 | 111 | قالوا أنؤمن لك واتبعك الأرذلون |
| | | அவர்கள்; "தாழ்ந்தவர்கள் உம்மைப் பின்பற்றும்போது, உம் மீது நாங்கள் ஈமான் கொள்வோமா," என்று கூறினார்கள். |
|
3044 | 26 | 112 | قال وما علمي بما كانوا يعملون |
| | | அவர் கூறினார்; அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பற்றி நான் அறியமாட்டேன். |
|
3045 | 26 | 113 | إن حسابهم إلا على ربي لو تشعرون |
| | | நீங்கள் அறிய்ககூடியவர்களாக இருப்பின், அவர்களுடைய கேள்வி கணக்கு (பற்றிய விசாரணை) என்னுடைய இறைவனிடம் தான் இருக்கிறது. |
|
3046 | 26 | 114 | وما أنا بطارد المؤمنين |
| | | முஃமின்களை நான் விரட்டி விடுபவன் அல்லன். |
|
3047 | 26 | 115 | إن أنا إلا نذير مبين |
| | | நான் பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிப்பவனேயன்றி வேறில்லை. |
|
3048 | 26 | 116 | قالوا لئن لم تنته يا نوح لتكونن من المرجومين |
| | | அதற்கவர்கள் கூறினார்கள்; "நூஹே! நீர் (உம் பிரச்சாரத்தை விட்டும்) விலகிக் கொள்ளாவிட்டால், நிச்சயமாக நீர் கல்லாலெறிந்து கொல்லப்படுவீர்" என்று கூறினார்கள். |
|