نتائج البحث: 6236
|
ترتيب الآية | رقم السورة | رقم الآية | الاية |
3034 | 26 | 102 | فلو أن لنا كرة فنكون من المؤمنين |
| | | நாங்கள் (உலகத்துக்கு) மீண்டு செல்ல வழி கிடைக்குமாயின், நிச்சயமாக நாங்கள் முஃமின்களாகி விடுவோமே! (என்றும் கூறுவார்கள்.) |
|
3035 | 26 | 103 | إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين |
| | | நிச்சயமாக இதிலே ஓர் அத்தாட்சி இருக்கிறது - எனினும் அவர்களில் பெரும்பாலோர் நம்பிக்கை கொள்வதில்லை. |
|
3036 | 26 | 104 | وإن ربك لهو العزيز الرحيم |
| | | மேலும், நிச்சயமாக உமது இறைவன் (யாவரையும்) மிகைத்தோனாகவும், கிருபை உடையோனாகவும் இருக்கிறான். |
|
3037 | 26 | 105 | كذبت قوم نوح المرسلين |
| | | நூஹுடைய சமூகத்தாரும், (இறை) தூதர்களைப் பொய்ப்பித்தார்கள். |
|
3038 | 26 | 106 | إذ قال لهم أخوهم نوح ألا تتقون |
| | | அவர்களுடைய சகோதரர் நூஹ் அவர்களிடம் கூறியபோது "நீங்கள் (அல்லாஹ்வுக்கு) அஞ்ச மாட்டீர்களா?" |
|
3039 | 26 | 107 | إني لكم رسول أمين |
| | | நிச்சயமாக நான் உங்களுக்கு (இறைவனால்) அனுப்பப் பெற்ற நம்பிக்கைக்குரிய தூதன் ஆவேன். |
|
3040 | 26 | 108 | فاتقوا الله وأطيعون |
| | | ஆகவே, அல்லாஹ்வுக்கு அஞ்சங்கள்; எனக்கு வழிபடுங்கள். |
|
3041 | 26 | 109 | وما أسألكم عليه من أجر إن أجري إلا على رب العالمين |
| | | இதற்காக, நான் உங்களிடம் கூலி எதுவும் கேட்கவில்லை. நிச்சயமாக எனக்குரிய கூலி அகிலங்களின் இறைவனிடம் இருக்கிறது. |
|
3042 | 26 | 110 | فاتقوا الله وأطيعون |
| | | ஆகவே, அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; எனக்கும் வழிபடுங்கள் (என்று நூஹ் கூறியபோது), |
|
3043 | 26 | 111 | قالوا أنؤمن لك واتبعك الأرذلون |
| | | அவர்கள்; "தாழ்ந்தவர்கள் உம்மைப் பின்பற்றும்போது, உம் மீது நாங்கள் ஈமான் கொள்வோமா," என்று கூறினார்கள். |
|