نتائج البحث: 6236
|
ترتيب الآية | رقم السورة | رقم الآية | الاية |
2992 | 26 | 60 | فأتبعوهم مشرقين |
| | | பிறகு, சூரியன் உதிக்கும் நேரத்தில் (ஃபிர்அவ்னின் கூட்டத்தார்) இவர்களைப் பின் தொடர்ந்தார்கள். |
|
2993 | 26 | 61 | فلما تراءى الجمعان قال أصحاب موسى إنا لمدركون |
| | | இவ்விரு கூட்டத்தினரும் ஒருவரையொருவர் கண்டபோது "நிச்சயமாக நாம் பிடிபட்டோம்" என்று மூஸாவின் தோழர்கள் கூறினர். |
|
2994 | 26 | 62 | قال كلا إن معي ربي سيهدين |
| | | அதற்கு (மூஸா), "ஒருக்காலும் இல்லை! நிச்சயமாக என் இறைவன் என்னுடன் இருக்கிறான். எனக்கு சீக்கிரமே அவன் வழி காட்டுவான்" என்று கூறினார்;. |
|
2995 | 26 | 63 | فأوحينا إلى موسى أن اضرب بعصاك البحر فانفلق فكان كل فرق كالطود العظيم |
| | | உம் கைத்தடியினால் இந்தக் கடலை நீர் அடியும்" என்று மூஸாவுக்கு வஹீ அறிவித்தோம். (அவ்வாறு அடித்ததும் கடல்) பிளந்தது (பிளவுண்ட) ஒவ்வொரு பகுதியும் பெரும் மலை போன்று ஆகிவிட்டது. |
|
2996 | 26 | 64 | وأزلفنا ثم الآخرين |
| | | (பின் தொடர்ந்து வந்த) மற்றவர்களையும் நாம் நெருங்கச் செய்தோம். |
|
2997 | 26 | 65 | وأنجينا موسى ومن معه أجمعين |
| | | மேலும், நாம் மூஸாவையும், அவருடன் இருந்த அனைவரையும் காப்பாற்றினோம். |
|
2998 | 26 | 66 | ثم أغرقنا الآخرين |
| | | பிறகு, மற்றவர்களை (ஃபிர்அவ்னின் கூட்டத்தாரை) நாம் மூழ்கடித்து விட்டோம். |
|
2999 | 26 | 67 | إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين |
| | | நிச்சயமாக இதிலே அத்தாட்சி இருக்கிறது எனினும் அவர்களில் பெரும் பாலோர் நம்பிக்கை கொள்பவர்களாக இல்லை. |
|
3000 | 26 | 68 | وإن ربك لهو العزيز الرحيم |
| | | (நபியே!) நிச்சயமாக உம்முடைய இறைவன் (யாவரையும்) மிகைத்தவனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கிறான். |
|
3001 | 26 | 69 | واتل عليهم نبأ إبراهيم |
| | | இன்னும், நீர் இவர்களுக்கு இப்றாஹீமின் சரிதையையும் ஓதிக் காண்பிப்பீராக! |
|