نتائج البحث: 6236
|
ترتيب الآية | رقم السورة | رقم الآية | الاية |
2983 | 26 | 51 | إنا نطمع أن يغفر لنا ربنا خطايانا أن كنا أول المؤمنين |
| | | "(அன்றியும்) முஃமினானவர்களில் நாங்கள் முதலாமவர்களாக இருப்பதினால் எங்கள் இறைவன் எங்கள் குற்றங்களை எங்களுக்கு மன்னித்து விடுவான்" என்று, நாங்கள் ஆதரவு வைக்கின்றோம் (என்றும் கூறினார்கள்). |
|
2984 | 26 | 52 | وأوحينا إلى موسى أن أسر بعبادي إنكم متبعون |
| | | மேலும், "நீர் என் அடியார்களை அழைத்துக் கொண்டு, இரவோடு இரவாகச் சென்று விடும்; நிச்சயமாக நீங்கள் பின் தொடரப்படுவீர்கள்" என்று நாம் மூஸாவுக்கு வஹீ அறிவித்தோம். |
|
2985 | 26 | 53 | فأرسل فرعون في المدائن حاشرين |
| | | (அவ்வாறு அவர்கள் சென்றதும்) ஃபிர்அவ்ன் (ஆட்களைத்) திரட்டுபவர்களைப் பட்டணங்களுக்கு அனுப்பி வைத்தான். |
|
2986 | 26 | 54 | إن هؤلاء لشرذمة قليلون |
| | | "நிச்சயமாக இவர்கள் மிகவும் சொற்பத் தொகையினர் தான். |
|
2987 | 26 | 55 | وإنهم لنا لغائظون |
| | | "நிச்சயமாக இவர்கள் நம்மை(ப் பெருங்) கோபத்திற்குள்ளாக்கி விட்டனர். |
|
2988 | 26 | 56 | وإنا لجميع حاذرون |
| | | "நிச்சயமாக நாம் அனைவரும் எச்சரிக்கையுடனே இருக்கிறோம்." |
|
2989 | 26 | 57 | فأخرجناهم من جنات وعيون |
| | | அப்போது நாம், அவர்களைத் தோட்டங்களை விட்டும், நீரூற்றுக்களை விட்டும் வெளியேற்றி விட்டோம். |
|
2990 | 26 | 58 | وكنوز ومقام كريم |
| | | இன்னும், (அவர்களுடைய) பொக்கிஷங்களை விட்டும், கண்ணியமான வீடுகளை விட்டும் (அவர்களை வெளியேற்றினோம்). |
|
2991 | 26 | 59 | كذلك وأورثناها بني إسرائيل |
| | | அவ்வாறு தான் (அவர்களை நடத்தினோம்) அத்துடன் பனூ இஸ்ராயீல்களை அவற்றுக்கு வாரிசுகளாகவும் நாம் ஆக்கினோம். |
|
2992 | 26 | 60 | فأتبعوهم مشرقين |
| | | பிறகு, சூரியன் உதிக்கும் நேரத்தில் (ஃபிர்அவ்னின் கூட்டத்தார்) இவர்களைப் பின் தொடர்ந்தார்கள். |
|