نتائج البحث: 6236
|
ترتيب الآية | رقم السورة | رقم الآية | الاية |
2966 | 26 | 34 | قال للملإ حوله إن هذا لساحر عليم |
| | | (ஃபிர்அவ்ன்) தன்னைச் சூழ்ந்து நின்ற தலைவர்களை நோக்கி "இவர் நிச்சயமாக திறமை மிக்க சூனியக்காரரே!" என்று கூறினான். |
|
2967 | 26 | 35 | يريد أن يخرجكم من أرضكم بسحره فماذا تأمرون |
| | | "இவர் தம் சூனியத்தைக் கொண்டு உங்களை உங்கள் நாட்டை விட்டும் வெளியேற்ற நாடுகிறார்; எனவே இதைப் பற்றி நீங்கள் கூறும் யோசனை என்ன?" (என்று கேட்டான்.) |
|
2968 | 26 | 36 | قالوا أرجه وأخاه وابعث في المدائن حاشرين |
| | | அதற்கவர்கள் "அவருக்கும், அவருடைய சகோதரருக்கும் சிறிது தவணை கொடுத்து விட்டு பல பட்டிணங்களுக்கு(ச் சூனியக்காரர்களைத்)திரட்டிக் கொண்டு வருவோரை அனுப்பி வைப்பீராக- |
|
2969 | 26 | 37 | يأتوك بكل سحار عليم |
| | | (அவர்கள் சென்று) சூனியத்தில் மகா வல்லவர்களையெல்லாம் உம்மிடம் கொண்டு வருவார்கள்" என்று கூறினார்கள். |
|
2970 | 26 | 38 | فجمع السحرة لميقات يوم معلوم |
| | | சூனியக்காரர்கள் குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட வேளையில் ஒன்று திரட்டப்பட்டார்கள். |
|
2971 | 26 | 39 | وقيل للناس هل أنتم مجتمعون |
| | | இன்னும் மக்களிடம் "(குறித்த நேரத்தில்) நீங்கள் எல்லோரும் வந்து கூடுபவர்களா?" என்று கேட்கப்பட்டது. |
|
2972 | 26 | 40 | لعلنا نتبع السحرة إن كانوا هم الغالبين |
| | | ஏனென்றால், சூனியக்காரர்கள் வெற்றி அடைந்தால், நாம் அவர்களைப் பின் பற்றிக் கூடும் (என்றும் கூறப்பட்டது). |
|
2973 | 26 | 41 | فلما جاء السحرة قالوا لفرعون أئن لنا لأجرا إن كنا نحن الغالبين |
| | | ஆகவே சூனியக்காரர்கள் வந்தவுடன், அவர்கள் ஃபிர்அவ்னை நோக்கி, "திண்ணமாக - நாங்கள் - (மூஸாவை) வென்று விட்டால், நிச்சயமாக எங்களுக்கு (அதற்குரிய) வெகுமதி கிடைக்குமல்லலா?" என்று கேட்டார்கள். |
|
2974 | 26 | 42 | قال نعم وإنكم إذا لمن المقربين |
| | | "ஆம்! (உங்களுக்கு வெகுமதி கிடைக்கும்) இன்னும் நிச்சயமாக நீங்கள் எனக்கு நெருக்கமானவர்களாகி விடுவீர்கள்" என்று அவன் கூறினான். |
|
2975 | 26 | 43 | قال لهم موسى ألقوا ما أنتم ملقون |
| | | மூஸா அவர்களை நோக்கி, நீங்கள் எறியக் கூடியதை எறியுங்கள்" என்று கூறினார். |
|