نتائج البحث: 6236
|
ترتيب الآية | رقم السورة | رقم الآية | الاية |
2948 | 26 | 16 | فأتيا فرعون فقولا إنا رسول رب العالمين |
| | | ஆதலின் நீங்கள் இருவரும் ஃபிர்அவ்னிடம் செல்லுங்கள்; அவனிடம் கூறுங்கள்; "நிச்சயமாக நாங்களிருவரும் அகிலத்தாருடைய இறைவனின் தூதர்கள். |
|
2949 | 26 | 17 | أن أرسل معنا بني إسرائيل |
| | | "எங்களுடன் பனூ இஸ்ராயீல்களை அனுப்பிவிடு!" (எனவும் கூறுங்கள்.) |
|
2950 | 26 | 18 | قال ألم نربك فينا وليدا ولبثت فينا من عمرك سنين |
| | | (ஃபிர்அவ்ன்) கூறினான்; நீர் குழந்தையாக இருந்தபோது நாம் உம்மை எங்களிடம் வைத்து வளர்க்கவில்லையா? இன்னும், உம் வயதில் பல ஆண்டுகள் எங்களிடத்தில் நீர் தங்கியிருக்கவில்லையா? (எனக் கூறினான்.) |
|
2951 | 26 | 19 | وفعلت فعلتك التي فعلت وأنت من الكافرين |
| | | "ஆகவே, நீர் செய்த (கூடாத கொலைச்) செயலையும் செய்துவிட்டீர்; மேலும், நீர் நன்றி மறந்தவராகவும் ஆகிவிட்டீர்" (என்றும் கூறினான்). |
|
2952 | 26 | 20 | قال فعلتها إذا وأنا من الضالين |
| | | (மூஸா) கூறினார்; "நான் தவறியவர்களில் (ஒருவனாக) இருந்த நிலையில் அதைச் செய்துவிட்டேன். |
|
2953 | 26 | 21 | ففررت منكم لما خفتكم فوهب لي ربي حكما وجعلني من المرسلين |
| | | "ஆகவே, நான் அப்போது உங்களைப் பற்றி பயந்தபோது, உங்களை விட்டு(த் தப்பி) ஓடினேன்; பிறகு என் இறைவன் எனக்கு ஞானத்தை அளித்து, (அவனுடைய) தூதர்களில் என்னை (ஒருவனாக) ஆக்கியிருக்கிறான். |
|
2954 | 26 | 22 | وتلك نعمة تمنها علي أن عبدت بني إسرائيل |
| | | "பனூ இஸ்ராயீல்களை அடிமையாக வைத்துக் கொண்டிருக்கும் நிலையில் இது நீ எனக்குச் சொல்லிக் காண்பிக்கக் கூடிய பாக்கியமாகுமா?" |
|
2955 | 26 | 23 | قال فرعون وما رب العالمين |
| | | அதற்கு ஃபிர்அவ்ன்; "அகிலத்தாருக்கு இறைவன் யார்?" என்று கேட்டான். |
|
2956 | 26 | 24 | قال رب السماوات والأرض وما بينهما إن كنتم موقنين |
| | | அதற்கு (மூஸா) "நீங்கள் உறுதி கொண்டவர்களாக இருப்பின், வானங்களுக்கும், பூமிக்கும் இவ்விரண்டுக்குமிடையே உள்ளவற்றுக்கும் இறைவனே (அகிலத்தாரின் இறைவன் ஆவான்)" என்று கூறினார். |
|
2957 | 26 | 25 | قال لمن حوله ألا تستمعون |
| | | தன்னை சுற்றியிருந்தவர்களை நோக்கி "நீங்கள் (இவர் சொல்வதைச்) செவிமடுக்கிறீர்கள் அல்லவா?" என்று (ஃபிர்அவ்ன்) கேட்டான். |
|