نتائج البحث: 6236
|
ترتيب الآية | رقم السورة | رقم الآية | الاية |
2742 | 23 | 69 | أم لم يعرفوا رسولهم فهم له منكرون |
| | | அல்லது அவர்கள் தங்களுடைய (இறுதித்) தூதரைச் சரிவர அறிந்து கொள்ளாது அவரை நிராகரிக்கிறவர்களாய் இருக்கின்றார்களா? |
|
2743 | 23 | 70 | أم يقولون به جنة بل جاءهم بالحق وأكثرهم للحق كارهون |
| | | அல்லது, "அவருக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறது" என்று அவர்கள் கூறுகிறார்களா? இல்லை அவர் உண்மையைக் கொண்டே அவர்களிடம் வந்துள்ளார், எனினும் அவர்களில் பெரும்பாலோர் அந்த உண்மையையே வெறுக்கிறார்கள். |
|
2744 | 23 | 71 | ولو اتبع الحق أهواءهم لفسدت السماوات والأرض ومن فيهن بل أتيناهم بذكرهم فهم عن ذكرهم معرضون |
| | | இன்னும் அந்த உண்மை அவர்களுடைய இச்சைகளைப் பின்பற்றி இருக்குமாயின் நிச்சயமாக வானங்களும், பூமியும் அவற்றிலுள்ளவைகளும் சீர்கெட்டுப் போயிருக்கும்; அதனால், அவர்களுக்கு நாம் நினைவூட்டும் நல்லுபதேசமான திக்ரை குர்ஆனை அளித்தோம். எனினும் அவர்கள் தங்களிடம் வந்த திக்ரை குர்ஆனை புறக்கணிக்கின்றனர். |
|
2745 | 23 | 72 | أم تسألهم خرجا فخراج ربك خير وهو خير الرازقين |
| | | அல்லது நீர் அவர்களிடம் கூலி ஏதும் கேட்கிறீரா? (இல்லை! ஏனெனில்) உம்முடைய இறைவன் கொடுக்கும் கூலியே மிகவும் மேலானது இன்னும் அளிப்பவர்களில் அவனே மிக்க மேலானவன். |
|
2746 | 23 | 73 | وإنك لتدعوهم إلى صراط مستقيم |
| | | மேலும், நிச்சயமாக நீர் அவர்களை ஸிராத்தும் முஸ்தகீம் (நேரான வழியின்) பக்கமே அழைக்கின்றீர். |
|
2747 | 23 | 74 | وإن الذين لا يؤمنون بالآخرة عن الصراط لناكبون |
| | | இன்னும் எவர் மறுமையை நம்பவில்லையோ, நிச்சயமாக அவர் அந்த (நேர்) வழியை விட்டு விலகியவர் ஆவார். |
|
2748 | 23 | 75 | ولو رحمناهم وكشفنا ما بهم من ضر للجوا في طغيانهم يعمهون |
| | | ஆனால் அ(த்தகைய)வர்கள் மீது கிருபை கொண்டு, அவர்களுக்கு ஏற்பட்ட துன்பத்தை நீக்கிவிடுவோமானால், அவர்கள் தட்டழிந்தவர்களாக தங்கள் வழிகேட்டிலேயே அவர்கள் நீடிக்கின்றனர். |
|
2749 | 23 | 76 | ولقد أخذناهم بالعذاب فما استكانوا لربهم وما يتضرعون |
| | | திடனாக நாம் அவர்களை வேதனையைக் கொண்டு பிடித்திருக்கிறோம்; ஆனால், அவர்கள் தங்கள் இறைவனுக்குப் பணியவுமில்லை தாழ்ந்து பிரார்; த்திக்கவுமில்லை. |
|
2750 | 23 | 77 | حتى إذا فتحنا عليهم بابا ذا عذاب شديد إذا هم فيه مبلسون |
| | | எதுவரையிலெனின், நாம் அவர்கள் மீது கடும் வேதனையின் வாயிலைத் திறந்து விடுவோமானால், அவர்கள் அதனால் நம்பிக்கை இழந்துவிடுகிறார்கள். |
|
2751 | 23 | 78 | وهو الذي أنشأ لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون |
| | | இன்னும் அவனே உங்களுக்குச் செவிப்புலனையும், பார்வைகளையும், இதயங்களையும் படைத்தவன்; மிகக் குறைவாகவே அவனுக்கு நீங்கள் நன்றி செலுத்துகிறீர்கள். |
|