نتائج البحث: 6236
|
ترتيب الآية | رقم السورة | رقم الآية | الاية |
2409 | 20 | 61 | قال لهم موسى ويلكم لا تفتروا على الله كذبا فيسحتكم بعذاب وقد خاب من افترى |
| | | (அப்பொழுது) மூஸா சூனியக் காரர்களிடம் "உங்களுக்குக் கேடுதான்! அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டாதீர்கள், (அவ்வாறு செய்தால்) அவன் வேதனையினால் உங்களை அழித்து விடுவான்; எவன் பொய்யை இட்டுக் கட்டுகிறானோ, திடனாக அவன் (நற்பேறு கெட்டு) அழிந்து விட்டான்" என்று கூறினார். |
|
2410 | 20 | 62 | فتنازعوا أمرهم بينهم وأسروا النجوى |
| | | சூனியக்காரர்கள் தமக்குள்ளே தங்கள் காரியத்தைக் குறித்து(த் தங்களிடையே) விவாதித்து, (அவ்விவாதத்தை) இரகசிய ஆலோசனையாகவும் வைத்துக் கொண்டனர். |
|
2411 | 20 | 63 | قالوا إن هذان لساحران يريدان أن يخرجاكم من أرضكم بسحرهما ويذهبا بطريقتكم المثلى |
| | | (சூனியக்காரர்கள் மக்களை நோக்கி;) "நிச்சயமாக இவ்விருவரும் சூனியக்காரர்களே! தம்மிருவருடைய சூனியத்தைக் கொண்டு உங்களை உங்களுடைய நாட்டை விட்டு வெளியேற்றவும், சிறப்பான உங்களுடைய (மார்க்கப்) பாதையைப் போக்கிவிடவுமே இவ்விருவரும் விரும்புகிறார்கள். |
|
2412 | 20 | 64 | فأجمعوا كيدكم ثم ائتوا صفا وقد أفلح اليوم من استعلى |
| | | "ஆகவே உங்கள் திட்டத்தை ஒரு சேரத் தீர்மானித்துக் கொண்டு அணி அணியாக வாருங்கள்; இன்றைய தினம் எவருடைய (கை) மேலோங்குகிறதோ, நிச்சயமாக அவர்தாம் வெற்றியடைவார்" (என்றுங் கூறினார்). |
|
2413 | 20 | 65 | قالوا يا موسى إما أن تلقي وإما أن نكون أول من ألقى |
| | | "மூஸாவே! நீர் எறிகின்றீரா? எறிகிறவர்களில் நாங்கள் முதலாவதாக இருக்கட்டுமா?" என்று (சூனியக்காரர்) கேட்டனர். |
|
2414 | 20 | 66 | قال بل ألقوا فإذا حبالهم وعصيهم يخيل إليه من سحرهم أنها تسعى |
| | | அதற்கவர்; "அவ்வாறன்று! நீங்களே (முதலில்) எறியுங்கள்" என்று (மூஸா) கூறினார். (அவர்கள் எறியவே) அவர்களுடைய கயிறுகளும் அவர்களுடைய தடிகளும் அவர்கள் சூனியத்தால் (பாம்புகளாக) நிச்சயமாக நெளிந்தோடுவது போல் அவருக்குத் தோன்றியது. |
|
2415 | 20 | 67 | فأوجس في نفسه خيفة موسى |
| | | அப்போது, மூஸா தம் மனதில் அச்சம் கொண்டார். |
|
2416 | 20 | 68 | قلنا لا تخف إنك أنت الأعلى |
| | | "(மூஸாவே!) நீர் பயப்படாதீர்! நிச்சயமாக நீர் தாம் மேலோங்கி நிற்பீர்!" என்று நாம் சொன்னோம். |
|
2417 | 20 | 69 | وألق ما في يمينك تلقف ما صنعوا إنما صنعوا كيد ساحر ولا يفلح الساحر حيث أتى |
| | | "இன்னும், உம் வலது கையில் இருப்பதை நீர் கீழே எறியும்; அவர்கள் செய்த (சூனியங்கள் யா)வற்றையும் அது விழுங்கி விடும்; அவர்கள் செய்தது சூனியக்காரனின் சூழ்ச்சியே ஆகும்; ஆகவே சூனியக்காரன் எங்கு சென்றாலும் வெற்றி பெற மாட்டான்" (என்றும் கூறினோம்). |
|
2418 | 20 | 70 | فألقي السحرة سجدا قالوا آمنا برب هارون وموسى |
| | | (மூஸா வெற்றி பெற்றதும்) சூனியக்காரர்கள் ஸுஜூது செய்தவர்களாக வீழ்த்தப்பட்டு - "ஹாரூனுடைய மூஸாவுடைய இறைவன் மீதே நாங்கள் ஈமான் கொள்கிறோம்" என்று கூறினார்கள். |
|