نتائج البحث: 6236
|
ترتيب الآية | رقم السورة | رقم الآية | الاية |
2355 | 20 | 7 | وإن تجهر بالقول فإنه يعلم السر وأخفى |
| | | (நபியே!) நீர் உரக்கச் சொன்னாலும் நிச்சயமாக அவன் இரகசியத்தையும் (அதை விட) மறைவானதையும் அறிகிறான். |
|
2356 | 20 | 8 | الله لا إله إلا هو له الأسماء الحسنى |
| | | அல்லாஹ் - அவனைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் வேறில்லை, அவனுக்கு அழகிய திரு நாமங்கள் இருக்கின்றன. |
|
2357 | 20 | 9 | وهل أتاك حديث موسى |
| | | இன்னும் (நபியே!) மூஸாவின் வரலாறு உம்மிடம் வந்ததா? |
|
2358 | 20 | 10 | إذ رأى نارا فقال لأهله امكثوا إني آنست نارا لعلي آتيكم منها بقبس أو أجد على النار هدى |
| | | அவர் நெருப்பைக் கண்டு தம் குடும்பத்தாரிடம் "நீங்கள் (இங்கு சிறிது) தங்குங்கள்; நிச்சயமாக நான் நெருப்பைக் கண்டேன்; ஒரு வேளை அதிலிருந்து உங்களுக்கு ஓர் எரி கொள்ளியைக் கொண்டு வரவோ, அல்லது நாம் செல்ல வேண்டிய பாதையை அந் நெருப்பி(ன் உதவியி)னால் கண்டு பிடிக்கவோ செய்யலாம்" என்று (கூறினார்). |
|
2359 | 20 | 11 | فلما أتاها نودي يا موسى |
| | | அவர் (நெருப்பின்) அருகே வந்த போது "மூஸாவே!" என்று அழைக்கப் பட்டார். |
|
2360 | 20 | 12 | إني أنا ربك فاخلع نعليك إنك بالواد المقدس طوى |
| | | "நிச்சயமாக நாம் தான் உம்முடைய இறைவன், நீர் உம் காலணிகள் இரண்டையும் கழற்றிவிடும்! நிச்சயமாக நீர் 'துவா' என்னும் புனிதமான பள்ளத்தாக்கில் இருக்கிறீர். |
|
2361 | 20 | 13 | وأنا اخترتك فاستمع لما يوحى |
| | | இன்னும் "நாம் உம்மை (என் தூதராக)த் தேர்ந்தெடுத்தேன், ஆதலால் வஹீயின் வாயிலாக (உமக்கு) அறிவிக்கப் படுவதற்கு நீர் செவியேற்பீராக. |
|
2362 | 20 | 14 | إنني أنا الله لا إله إلا أنا فاعبدني وأقم الصلاة لذكري |
| | | "நிச்சயமாக நாம் தான் அல்லாஹ்! என்னைத் தவிர வேறு நாயன் இல்லை, ஆகவே, என்னையே நீர் வணங்கும், என்னை தியானிக்கும் பொருட்டு தொழுகையை நிலைநிறுத்துவீராக. |
|
2363 | 20 | 15 | إن الساعة آتية أكاد أخفيها لتجزى كل نفس بما تسعى |
| | | "ஒவ்வோர் ஆத்மாவும் தான் செய்ததற்குத் தக்கபடி பிரதிபலன்கள் அளிக்கப்படும் பொருட்டு (நியாயத் தீர்ப்புக்குரிய) வேளை நிச்சயமாக வரவிருக்கிறது, ஆயினும் அதை மறைத்து வைக்க நாடுகிறேன். |
|
2364 | 20 | 16 | فلا يصدنك عنها من لا يؤمن بها واتبع هواه فتردى |
| | | "ஆகவே, அதனை நம்பாது, தன் (மன) இச்சையைப் பின்பற்றுபவன் திடனாக அதைவிட்டும் உம்மைத் திருப்பிவிட வேண்டாம். அவ்வாறாயின், நீர் அழிந்துபோவீர். |
|