نتائج البحث: 6236
|
ترتيب الآية | رقم السورة | رقم الآية | الاية |
2350 | 20 | 2 | ما أنزلنا عليك القرآن لتشقى |
| | | (நபியே!) நீர் துன்பப்படுவதற்காக நாம் இந்த குர்ஆனை உம்மீது இறக்கவில்லை. |
|
2351 | 20 | 3 | إلا تذكرة لمن يخشى |
| | | (அல்லாஹ்வுக்கு) அஞ்சுவோருக்கு நல்லுபதேசமே அன்றி (வேறில்லை). |
|
2352 | 20 | 4 | تنزيلا ممن خلق الأرض والسماوات العلى |
| | | பூமியையும், உயர்வான வானங்களையும் படைத்தவனிடமிருந்து அது இறக்கி அருளப் பெற்றது. |
|
2353 | 20 | 5 | الرحمن على العرش استوى |
| | | அர்ரஹ்மான் அர்ஷின் மீது அமைந்தான். |
|
2354 | 20 | 6 | له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى |
| | | வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும், இவ்விரண்டிற்கும் இடையே உள்ளவையும், மண்ணுக்கு அடியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. |
|
2355 | 20 | 7 | وإن تجهر بالقول فإنه يعلم السر وأخفى |
| | | (நபியே!) நீர் உரக்கச் சொன்னாலும் நிச்சயமாக அவன் இரகசியத்தையும் (அதை விட) மறைவானதையும் அறிகிறான். |
|
2356 | 20 | 8 | الله لا إله إلا هو له الأسماء الحسنى |
| | | அல்லாஹ் - அவனைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் வேறில்லை, அவனுக்கு அழகிய திரு நாமங்கள் இருக்கின்றன. |
|
2357 | 20 | 9 | وهل أتاك حديث موسى |
| | | இன்னும் (நபியே!) மூஸாவின் வரலாறு உம்மிடம் வந்ததா? |
|
2358 | 20 | 10 | إذ رأى نارا فقال لأهله امكثوا إني آنست نارا لعلي آتيكم منها بقبس أو أجد على النار هدى |
| | | அவர் நெருப்பைக் கண்டு தம் குடும்பத்தாரிடம் "நீங்கள் (இங்கு சிறிது) தங்குங்கள்; நிச்சயமாக நான் நெருப்பைக் கண்டேன்; ஒரு வேளை அதிலிருந்து உங்களுக்கு ஓர் எரி கொள்ளியைக் கொண்டு வரவோ, அல்லது நாம் செல்ல வேண்டிய பாதையை அந் நெருப்பி(ன் உதவியி)னால் கண்டு பிடிக்கவோ செய்யலாம்" என்று (கூறினார்). |
|
2359 | 20 | 11 | فلما أتاها نودي يا موسى |
| | | அவர் (நெருப்பின்) அருகே வந்த போது "மூஸாவே!" என்று அழைக்கப் பட்டார். |
|