نتائج البحث: 6236
|
ترتيب الآية | رقم السورة | رقم الآية | الاية |
1856 | 15 | 54 | قال أبشرتموني على أن مسني الكبر فبم تبشرون |
| | | அதற்கவர், "என்னை முதுமை வந்தடைந்திருக்கும்போதா எனக்கு நன்மாராயங் கூறுகிறீர்கள்? எந்த அடிப்படையில் நீங்கள் நன்மாராயங் கூறுகிறீர்கள்? உங்கள் நற்செய்தி எதைப்பற்றியது?" எனக் கேட்டார். |
|
1857 | 15 | 55 | قالوا بشرناك بالحق فلا تكن من القانطين |
| | | அதற்கவர்கள், "மெய்யாகவே, நாங்கள் உமக்கு நன்மாராயங் கூறினோம்; ஆகவே நீர் (அதுபற்றி) நிராசை கொண்டோரில் ஒருவராகி விடாதீர்!" என்று கூறினார்கள். |
|
1858 | 15 | 56 | قال ومن يقنط من رحمة ربه إلا الضالون |
| | | "வழிகெட்டவர்களைத் தவிர, வேறெவர் தம் இறைவனுடைய அருளைப்பற்றி நிராசைக் கொள்வர்" என்று (இப்ராஹீம் பதில்) சொன்னார், |
|
1859 | 15 | 57 | قال فما خطبكم أيها المرسلون |
| | | "(அல்லாஹ்வின்) தூதர்களே! உங்களுடைய காரியமென்ன?" என்று (இப்றாஹீம்) கேட்டார். |
|
1860 | 15 | 58 | قالوا إنا أرسلنا إلى قوم مجرمين |
| | | அதற்கவர்கள், "குற்றவாளிகளான ஒரு கூட்டத்தாரிடம் நாங்கள் அனுப்பப்பட்டுள்ளோம். |
|
1861 | 15 | 59 | إلا آل لوط إنا لمنجوهم أجمعين |
| | | "லூத்தின் கிளையாரைத் தவிர, அவர்களனைவரையும் நிச்சயமாக நாம் காப்பாற்றுவோம். |
|
1862 | 15 | 60 | إلا امرأته قدرنا إنها لمن الغابرين |
| | | ஆனால் அவர் (லூத்) உடைய மனைவியைத் தவிர - நிச்சயமாக அவள் (காஃபிர்களின் கூட்டத்தாரோடு) பின்தங்கியிருப்பாள் என்று நாம் நிர்ணயித்து விட்டோம்" என்று (வானவர்கள்) கூறினார்கள். |
|
1863 | 15 | 61 | فلما جاء آل لوط المرسلون |
| | | (இறுதியில்) அத்தூதர்கள் லூத்துடைய கிளையாரிடம் வந்த போது. |
|
1864 | 15 | 62 | قال إنكم قوم منكرون |
| | | (அவர்களை நோக்கி எனக்கு) அறிமுகமில்லாத மக்களாக நீங்கள் இருக்கிறீர்கள்" என்று (லூத்) சொன்னார், |
|
1865 | 15 | 63 | قالوا بل جئناك بما كانوا فيه يمترون |
| | | (அதற்கு அவர்கள்,) "அல்ல, (உம் கூட்டதாராகிய) இவர்கள் எதைச் சந்தேகித்தார்களோ, அதை நாம் உம்மிடம் கொண்டு வந்திருக்கிறோம்; |
|