نتائج البحث: 6236
|
ترتيب الآية | رقم السورة | رقم الآية | الاية |
1829 | 15 | 27 | والجان خلقناه من قبل من نار السموم |
| | | (அதற்கு) முன்னர் ஜின்னை (ஜின்களின் மூல பிதாவை) கடிய சூடுள்ள நெருப்பிலிருந்து நாம் படைத்தோம். |
|
1830 | 15 | 28 | وإذ قال ربك للملائكة إني خالق بشرا من صلصال من حمإ مسنون |
| | | (நபியே!) உம்முடைய இறைவன் மலக்குகளிடம்; "ஓசை தரும் கருப்பான களிமண்ணிலிருந்து, மனிதனை நிச்சயமாக நான் படைக்கப்போகிறேன்" என்றும், |
|
1831 | 15 | 29 | فإذا سويته ونفخت فيه من روحي فقعوا له ساجدين |
| | | அவரை நான் செவ்வையாக உருவாக்கி, அவரில் என் ஆவியிலிருந்து ஊதியதும், "அவருக்கு சிரம் பணியுங்கள்" என்றும் கூறியதை (நினைவு கூர்வீராக)! |
|
1832 | 15 | 30 | فسجد الملائكة كلهم أجمعون |
| | | அவ்வாறே மலக்குகள் - அவர்கள் எல்லோரும் - சிரம் பணிந்தார்கள். |
|
1833 | 15 | 31 | إلا إبليس أبى أن يكون مع الساجدين |
| | | இப்லீஸைத்தவிர - அவன் சிரம் பணிந்தவர்களுடன் இருப்பதை விட்டும் விலகிக்கொண்டான். |
|
1834 | 15 | 32 | قال يا إبليس ما لك ألا تكون مع الساجدين |
| | | "இப்லீஸே! சிரம் பணிந்தவர்களுடனே நீயும் சேராமல் (விலகி) இருந்ததற்குக் காரணம் என்ன?" என்று (இறைவன்) கேட்டான். |
|
1835 | 15 | 33 | قال لم أكن لأسجد لبشر خلقته من صلصال من حمإ مسنون |
| | | அதற்கு இப்லீஸ், "ஓசை தரும் கருப்பான களிமண்ணிலிருந்து, நீ படைத்துள்ள (ஒரு) மனிதனுக்கு நான் சிரம் பணிவதற்கில்லை!" என்று கூறினான். |
|
1836 | 15 | 34 | قال فاخرج منها فإنك رجيم |
| | | "அவ்வாறாயின், நீ இங்கிருந்து வெளியேறிவிடு நிச்சயமாக நீ விரட்டப்பட்டவனாக இருக்கிறாய்." |
|
1837 | 15 | 35 | وإن عليك اللعنة إلى يوم الدين |
| | | "மேலும், நிச்சயமாக நியாயத் தீர்ப்பு நாள் வரை உன் மீது சாபம் உண்டாவதாக!" என்று (இறைவனும்) கூறினான். |
|
1838 | 15 | 36 | قال رب فأنظرني إلى يوم يبعثون |
| | | "என்னுடைய இறைவனே! இறந்தவர்கள் எழுப்பப்படும் நாள்வரை எனக்கு அவகாசம் கொடுப்பாயாக!" என்று இப்லீஸ் கூறினான். |
|