نتائج البحث: 6236
|
ترتيب الآية | رقم السورة | رقم الآية | الاية |
1821 | 15 | 19 | والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل شيء موزون |
| | | பூமியை நாம் விரித்து அதில் உறுதியான, (அசையா) மலைகளை நிலைப் படுத்தினோம்; ஒவ்வொரு பொருளையும் அதற்குரிய அளிவின் படி அதில் நாம் முளைப்பித்தோம். |
|
1822 | 15 | 20 | وجعلنا لكم فيها معايش ومن لستم له برازقين |
| | | நாம் அதில் உங்களுக்கும் நீங்கள் எவருக்கு உணவளிக்கிறவர்களாக இல்லையோ அவர்களுக்கும் வாழ்க்கைக்குத் தேவையான பொருட்களை ஆக்கியுள்ளோம். |
|
1823 | 15 | 21 | وإن من شيء إلا عندنا خزائنه وما ننزله إلا بقدر معلوم |
| | | ஒவ்வொரு பொருளுக்குமான பொக்கிஷங்கள் நம்மிடமே இருக்கின்றன அவற்றை நாம் ஒரு குறிப்பிட்ட அளவுப்படி அல்லாமல் இறக்கிவைப்பதில்லை. |
|
1824 | 15 | 22 | وأرسلنا الرياح لواقح فأنزلنا من السماء ماء فأسقيناكموه وما أنتم له بخازنين |
| | | இன்னும் காற்றுகளை சூல் கொண்ட மேகங்களாக நாமே அனுப்புகிறோம்; பின்னர் வானத்திலிருந்து நாம் மழை பொழிவித்து, அதனை உங்களுக்கு நாம் புகட்டுகிறோம் - நீங்கள் அதனைச் சேகரித்து வைப்பவர்களும் இல்லை. |
|
1825 | 15 | 23 | وإنا لنحن نحيي ونميت ونحن الوارثون |
| | | நிச்சயமாக நாமே உயிரும் கொடுக்கிறோம், நாமே மரிக்கவும் வைக்கின்றோம்; மேலும், எல்லாவற்றிற்கும் வாரிஸாக (உரிமையாளனாக) நாமே இருக்கின்றோம். |
|
1826 | 15 | 24 | ولقد علمنا المستقدمين منكم ولقد علمنا المستأخرين |
| | | உங்களில் முந்தியவர்களையும் நாம் நிச்சயமாக அறிவோம்; பிந்தியவர்களையும் நாம் நிச்சயமாக அறிவோம். |
|
1827 | 15 | 25 | وإن ربك هو يحشرهم إنه حكيم عليم |
| | | நிச்சயமாக உம்முடைய இறைவன் (இறுதி நாளில்) அவர்களை ஒன்று திரட்டுவான்; நிச்சயமாக அவன் ஞானம் மிக்கவன்; (யாவற்றையும்) நன்கறிபவன். |
|
1828 | 15 | 26 | ولقد خلقنا الإنسان من صلصال من حمإ مسنون |
| | | ஓசை தரக்கூடிய கருப்பான களி மண்ணால் மனிதனை நிச்சயமாக நாமே படைத்தோம். |
|
1829 | 15 | 27 | والجان خلقناه من قبل من نار السموم |
| | | (அதற்கு) முன்னர் ஜின்னை (ஜின்களின் மூல பிதாவை) கடிய சூடுள்ள நெருப்பிலிருந்து நாம் படைத்தோம். |
|
1830 | 15 | 28 | وإذ قال ربك للملائكة إني خالق بشرا من صلصال من حمإ مسنون |
| | | (நபியே!) உம்முடைய இறைவன் மலக்குகளிடம்; "ஓசை தரும் கருப்பான களிமண்ணிலிருந்து, மனிதனை நிச்சயமாக நான் படைக்கப்போகிறேன்" என்றும், |
|