نتائج البحث: 6236
|
ترتيب الآية | رقم السورة | رقم الآية | الاية |
1801 | 14 | 51 | ليجزي الله كل نفس ما كسبت إن الله سريع الحساب |
| | | அல்லாஹ் ஒவ்வோர் ஆத்மாவுக்கும் அது சம்பாதித்ததற்கான கூலி கொடுப்பதற்காகவே (அவர்களை அல்லாஹ் இவ்வாறு செய்வான்.) நிச்சயமாக அல்லாஹ் கேள்வி கணக்குக் கேட்பதில் மிகவும் தீவிரமானவன். |
|
1802 | 14 | 52 | هذا بلاغ للناس ولينذروا به وليعلموا أنما هو إله واحد وليذكر أولو الألباب |
| | | இதன் மூலம் அவர்கள் எச்சரிக்கப் படுவதற்காகவும் (வணக்கத்திற்குரிய) அவன் ஒரே நாயன் தான் என்று அவர்கள் அறிந்து கொள்வதற்காகவும் அறிவுடையோர் நல்லணர்வு பெறுவதற்காகவும் மனிதர்களுக்கு இது ஓர் அறிவிப்பாகும். |
|
1803 | 15 | 1 | بسم الله الرحمن الرحيم الر تلك آيات الكتاب وقرآن مبين |
| | | அலிஃப், லாம், றா. (நபியே!) இவை வேதத்தினுடையவும் தெளிவான திருக்குர்ஆனுடையவுமான வசனங்களாகும். |
|
1804 | 15 | 2 | ربما يود الذين كفروا لو كانوا مسلمين |
| | | தாங்களும் முஸ்லீம்களாக இருந்திருக்க வேண்டுமே, என்று காஃபிர்கள் (மறுமையில் பெரிதும்) ஆசைப்படுவார்கள். |
|
1805 | 15 | 3 | ذرهم يأكلوا ويتمتعوا ويلههم الأمل فسوف يعلمون |
| | | (இம்மையில் தம் விருப்பம் போல்) புசித்துக் கொண்டும், சுகம் அனுபவித்துக் கொண்டும் இருக்க அவர்களை விட்டு விடுவீராக அவர்களுடைய வீணான ஆசைகள் (மறுமையிலிருந்தும்) அவர்களைப் பராக்காக்கி விட்டன (இதன் பலனைப் பின்னர்) அவர்கள் நன்கறிந்து கொள்வார்கள். |
|
1806 | 15 | 4 | وما أهلكنا من قرية إلا ولها كتاب معلوم |
| | | எந்த ஊர்(வாசி)களையும் (அவர்களுடைய பாவங்களின் காரணமாக) அவர்களுக்கெனக் குறிப்பிட்ட காலத்தவணையிலன்றி நாம் அழித்துவிடுவதுமில்லை. |
|
1807 | 15 | 5 | ما تسبق من أمة أجلها وما يستأخرون |
| | | எந்த ஒரு சமுதாயமும் தனக்குரிய தவணைக்கு முந்தவும் மாட்டார்கள்; பிந்தவும் மாட்டார்கள். |
|
1808 | 15 | 6 | وقالوا يا أيها الذي نزل عليه الذكر إنك لمجنون |
| | | (நினைவூட்டும்) வேதம் அருளப் பட்ட(தாகக் கூறுப)வரே! நிச்சயமாக நீர் பைத்தியக்காரர்தான் என்றும் கூறுகின்றனர். |
|
1809 | 15 | 7 | لو ما تأتينا بالملائكة إن كنت من الصادقين |
| | | "நீர் உண்மையாளரில் ஒருவராக இருப்பின் நீர் எங்களிடத்தில் மலக்குகளைக் கொண்டு வந்திருக்க வேண்டாமா?" (என்றும் கூறுகின்றனர்.) |
|
1810 | 15 | 8 | ما ننزل الملائكة إلا بالحق وما كانوا إذا منظرين |
| | | நாம் மலக்குகளை உண்மையான (தக்க காரணத்தோடு அல்லாமல் இறக்குவதில்லை அப்(படி இறக்கப்படும்) போது அ(ந் நிராகரிப்ப)வர்கள் அவகாசம் கொடுக்கப்பட மாட்டார்கள். |
|