نتائج البحث: 6236
|
ترتيب الآية | رقم السورة | رقم الآية | الاية |
1410 | 10 | 46 | وإما نرينك بعض الذي نعدهم أو نتوفينك فإلينا مرجعهم ثم الله شهيد على ما يفعلون |
| | | (உம் வாழ்நாளிலேயே) நாம் அவர்களுக்கு வாக்களித்த (வேதனைகளில்) ஒரு பகுதி (சம்பவிப்பதை) நாம் உமக்குக் காண்பித்தாலும், அல்லது (அதற்கு மன்னமேயே) நாம் உம் ஆத்மாவை கைப்பற்றிக் கொண்டாலும் - (எப்படியிருப்பினும்) அவர்கள் நம்மிடமே திரும்பி வர வேண்டியுள்ளது; இறுதியில், அவர்கள் செய்வதற்கெல்லாம் அல்லாஹ் சாட்சியாக இருக்கின்றான். |
|
1411 | 10 | 47 | ولكل أمة رسول فإذا جاء رسولهم قضي بينهم بالقسط وهم لا يظلمون |
| | | ஒவ்வொரு சமூகத்தாருக்கும் (நாமனுப்பிய இறை) தூதர் உண்டு; அவர்களுடைய தூதர் (அவர்களிடம்) வரும்போது அவர்களுக்கிடையில் நியாயத்துடனேயே தீர்ப்பளிக்கப்படும் - அவர்கள் (ஒரு சிறிதும்) அநியாயம் செய்யப்படமாட்டார்கள். |
|
1412 | 10 | 48 | ويقولون متى هذا الوعد إن كنتم صادقين |
| | | "நீங்கள் உண்மையாளராக இருந்தால் (அச்ச மூட்டப்படும் வேதனை பற்றிய) இந்த வாக்குறுதி எப்போது (அமலுக்கு வரும்)" என்று அவர்கள் கேட்கிறார்கள். |
|
1413 | 10 | 49 | قل لا أملك لنفسي ضرا ولا نفعا إلا ما شاء الله لكل أمة أجل إذا جاء أجلهم فلا يستأخرون ساعة ولا يستقدمون |
| | | (நபியே!) நீர் கூறும்; "அல்லாஹ் நாடியதைத் தவிர எனக்கு எவ்விதத் தீமையோ, நன்மையே, எனக்கே செய்து கொள்ள, நான் எவ்வித அதிகாரமும் பெற்றிருக்கவில்லை; ஒவ்வொரு சமூகத்தினருக்கும் ஒரு (குறிப்பட்ட காலத்)தவணையுண்டு; அவர்களது தவணை வந்து விட்டால் ஒரு நாழிகை பிந்தவும் மாட்டார்கள் முந்தவும் மாட்டார்கள்." |
|
1414 | 10 | 50 | قل أرأيتم إن أتاكم عذابه بياتا أو نهارا ماذا يستعجل منه المجرمون |
| | | (நபியே!) நீர் கூறுவீராக் "அவனுடைய வேதனை உங்களுக்கு இரவிலோ பகலிலோ வந்துவிடுமானால் - (அதைத் தடுத்துவிட முடியுமா? என்பதை) கவனித்தீர்களா? குற்றவாளிகள் எதை அவசரமாகத் தேடுகிறார்கள்? |
|
1415 | 10 | 51 | أثم إذا ما وقع آمنتم به آلآن وقد كنتم به تستعجلون |
| | | "அது வந்ததன் பின்னரா அதை நீங்கள் நம்புவீர்கள்? (அவ்வேதனை வந்ததும்) இதோ! நீங்கள் எது (வர வேண்டும் என்று அவசரப்பட்டுக் கொண்டிருந்தீர்களோ அது வந்து விட்டது" (என்று தான் கூறப்படும்). |
|
1416 | 10 | 52 | ثم قيل للذين ظلموا ذوقوا عذاب الخلد هل تجزون إلا بما كنتم تكسبون |
| | | அன்றியும், அந்த அநியாயக்காரர்களை நோக்கி; "என்றென்றும் நிலைத்திருக்கக் கூடிய இவ்வேதனையைச் சவைத்துக் கொண்டிருங்கள் - நீங்கள் சம்பாதித்ததைத் தவிர (வேறு) கூலி கொடுக்கப்படுவீர்களா?" என்று கூறப்படும். |
|
1417 | 10 | 53 | ويستنبئونك أحق هو قل إي وربي إنه لحق وما أنتم بمعجزين |
| | | மேலும் "அது உண்மை தானா?" என்று (நபியே! அவர்கள்) உம்மிடம் வினவுகிறார்கள்; "ஆம்! என் இறைவன் மீது சத்தியமாய் நிச்சயமாக அது உண்மையே. (அதை) நீங்கள் தடுத்துவிட முடியாது" என்று கூறுவீராக. |
|
1418 | 10 | 54 | ولو أن لكل نفس ظلمت ما في الأرض لافتدت به وأسروا الندامة لما رأوا العذاب وقضي بينهم بالقسط وهم لا يظلمون |
| | | (அந்த நாளின்) வேதனையைக் காணும்போதுகள்ர்ர்கள்ற அநியாயம் செய்த ஒவ்வோர் ஆத்மாவும், அதனிடம் உலகத்திலுள்ள பொருட்கள் எல்லாமே இருந்திருந்தாலும் அவை அனைத்தையுமே (தனக்குப்) பரிகாரமாகக் கொடுத்துவிட நாடும்; தன் கைசேதத்தையும், கழிவிரக்கத்தையும் வெளிப்படுத்தும்; ஆனால் (அந்நாளில்) அவையிடையே நியாயமாகவே தீர்ப்பளிக்கப்படும் - (ஒரு சிறிதும்) அவற்றுக்கு அநியாயம் செய்யப்பட மாட்டாது. |
|
1419 | 10 | 55 | ألا إن لله ما في السماوات والأرض ألا إن وعد الله حق ولكن أكثرهم لا يعلمون |
| | | வானங்களிலும், பூமியிலும் இருப்பவை அனைத்தும் அல்லாஹ்வுக்கே சொந்தமானவை என்பதைத் திடமாக அறிந்து கொள்ளுங்கள்; அல்லாஹ்வின் வாக்குறுதியும் நிச்சயமாகவே உண்மையானது என்பதையும் அறிந்து கொள்ளுங்கள் - எனினும் அவர்களில் பெரும்பாரோர் (இதை) அறிந்து கொள்வதில்லை. |
|