نتائج البحث: 6236
|
ترتيب الآية | رقم السورة | رقم الآية | الاية |
1057 | 7 | 103 | ثم بعثنا من بعدهم موسى بآياتنا إلى فرعون وملئه فظلموا بها فانظر كيف كان عاقبة المفسدين |
| | | அவர்களுக்குப் பிறகு, மூஸாவை நம் அத்தாட்சிகளுடன் ஃபிர்அவ்னிடத்திலும் அவனுடைய தலைவர்களிடத்திலும் நாம் அனுப்பிவைத்தோம்; அப்போது அவர்கள் அவற்றை (நிராகரித்து) அநியாயம் செய்து விட்டார்கள்; இத்தகைய குழப்பக்காரர்களின் முடிவு எப்படியிருந்தது என்பதை கவனிப்பீராக! |
|
1058 | 7 | 104 | وقال موسى يا فرعون إني رسول من رب العالمين |
| | | "ஃபிர்அவ்னே! நிச்சயமாக நான் அகிலங்களின் இறைவனால் அனுப்பப்பட்ட தூதன் ஆவேன்" என்று மூஸா கூறினார். |
|
1059 | 7 | 105 | حقيق على أن لا أقول على الله إلا الحق قد جئتكم ببينة من ربكم فأرسل معي بني إسرائيل |
| | | "அல்லாஹ்வின் மீது உண்மையைத் தவிர (வேறெதுவும்) கூறாமலிருப்பது என்மீது கடமையாகும்; உங்களுடைய இறைவனிடமிருந்து உங்களுக்குத் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்திருக்கிறேன் - ஆகவே இஸ்ரவேலர்களை என்னுடன் அனுப்பிவை" (என்றும் அவர் கூறினார்). |
|
1060 | 7 | 106 | قال إن كنت جئت بآية فأت بها إن كنت من الصادقين |
| | | அதற்கு அவன், "நீர் அத்தாட்சிகளைக் கொண்டு வந்திருப்பீரானால் - நீர் உண்மையாளராக இருப்பின் அதைக் கொண்டுவாரும்" என்று கூறினான். |
|
1061 | 7 | 107 | فألقى عصاه فإذا هي ثعبان مبين |
| | | அப்போது (மூஸா) தம் கைத்தடியை எறிந்தார் - உடனே அது ஒரு பெரிய பாம்பாகி விட்டது. |
|
1062 | 7 | 108 | ونزع يده فإذا هي بيضاء للناظرين |
| | | மேலும் அவர் தம் கையை வெளியில் எடுத்தார் - உடனே அது பார்ப்பவர்களுக்குப் பளிச்சிடும் வெண்மையானதாக இருந்தது. |
|
1063 | 7 | 109 | قال الملأ من قوم فرعون إن هذا لساحر عليم |
| | | ஃபிர்அவ்னின் சமூகத்தாரைச் சேர்ந்த தலைவர்கள், "இவர் நிச்சயமாக திறமைமிக்க சூனியக்காரரே!" என்று கூறினார்கள். |
|
1064 | 7 | 110 | يريد أن يخرجكم من أرضكم فماذا تأمرون |
| | | (அதற்கு, ஃபிர்அவ்ன்), "இவர் உங்களை, உங்களுடைய நாட்டை விட்டும் வெளியேற்ற நாடுகிறார்; எனவே (இதைப்பற்றி) நீங்கள் கூறும் யோசனை யாது?" (என்று கேட்டான்.) |
|
1065 | 7 | 111 | قالوا أرجه وأخاه وأرسل في المدائن حاشرين |
| | | அதற்கவர்கள், "அவருக்கும் அவருடைய சகோதரருக்கும் சிறிது தவணையைக் கொடுத்து விட்டு, பல பட்டினங்களுக்குச் (சூனியக்காரர்களைத்) திரட்டிக்கொண்டு வருவோரை அனுப்பி வைப்பீராக! |
|
1066 | 7 | 112 | يأتوك بكل ساحر عليم |
| | | "அவர்கள் சென்று சூனியத்தில் வல்லவர்களையெல்லாம் உம்மிடம் கொண்டு வருவார்கள்" என்று கூறினார்கள். |
|