نتائج البحث: 6236
|
ترتيب الآية | رقم السورة | رقم الآية | الاية |
1 | 1 | 1 | بسم الله الرحمن الرحيم |
| | | அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்பாளன், அல்லாஹ்வின் பெயரால்! (தொடங்குகிறேன்). |
|
2 | 1 | 2 | الحمد لله رب العالمين |
| | | அனைத்துப்புகழும், அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும். |
|
3 | 1 | 3 | الرحمن الرحيم |
| | | (அவன்) அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன். |
|
4 | 1 | 4 | مالك يوم الدين |
| | | (அவனே நியாயத்) தீர்ப்பு நாளின் அதிபதி(யும் ஆவான்). |
|
5 | 1 | 5 | إياك نعبد وإياك نستعين |
| | | (இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம், உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். |
|
6 | 1 | 6 | اهدنا الصراط المستقيم |
| | | நீ எங்களை நேர் வழியில் நடத்துவாயாக! |
|
7 | 1 | 7 | صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين |
| | | (அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி, (அது) உன் கோபத்துக்கு ஆளானோர் வழியுமல்ல, நெறி தவறியோர் வழியுமல்ல. |
|
8 | 2 | 1 | بسم الله الرحمن الرحيم الم |
| | | அலிஃப், லாம், மீ; ம். |
|
9 | 2 | 2 | ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين |
| | | இது, (அல்லாஹ்வின்) திரு வேதமாகும்;, இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை, பயபக்தியுடையோருக்கு (இது) நேர்வழிகாட்டியாகும். |
|
10 | 2 | 3 | الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون |
| | | (பயபக்தியுடைய) அவர்கள், (புலன்களுக்கு எட்டா) மறைவானவற்றின் மீது நம்பிக்கை கொள்வார்கள்; தொழுகையையும் (உறுதியாக முறைப்படிக்) கடைப்பிடித்து ஒழுகுவார்கள்; இன்னும் நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழியில்) செலவும் செய்வார்கள். |
|